உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்

நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்துள்ள கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்றாலும் நான்கு நாட்களில் இந்த படம் 400 கோடி வசூலை கடந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கூலி படத்தின் வசூல் எப்படி உள்ளது? என்பது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛கூலி படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு மற்ற ரசிகர்களும் தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மட்டுமின்றி விடுமுறை முடிந்த பிறகும் தியேட்டர்களில் 80 சதவீதம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் கூலி படம் குறித்து வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தின் வசூலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அதோடு விமர்சகர்கள் படத்தை குறை சொன்னாலும் ரசிகர்கள் எந்த குறையும் சொல்லவில்லை. ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றால் நேற்று திங்கட்கிழமை கண்டிப்பாக ரசிகர்களின் வருகை குறைந்திருக்கும். ஆனால் நேற்றும் அதற்கு முந்தைய மூன்று நாட்களைப் போன்றே கூட்டம் இருந்தது. அதனால் விமர்சனங்களை கடந்து கூலி படம் நல்ல முறையில் வசூலித்து வெற்றி பெறும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

தொளபதி
2025-08-20 00:30:31

உண்மையை பளிச்சென சொல்லக்கூடியவர். இவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். படம் ஓடக்கூடாது என்ற நமது சொந்த விருப்பத்தை அவர் சொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு. தவிர அணில், காக்கைகளுக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது என்பதால் பிற மொழிகளில் எதிர்மறை பிரசாரங்கள் இல்லாமல் வசூல் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது.


முருகன்
2025-08-19 17:25:42

இவர் பேச்சில் எப்போதும் உண்மை இருக்காது


angbu ganesh, chennai
2025-08-20 09:59:51

முருகன்னு பேர் வச்சிட்டு ஏம்ப்பா இப்படி


சசிக்குமார் திருப்பூர்
2025-08-19 16:24:55

அதெல்லாம் முதலில் ரிசர்வ் பண்ணிய டிக்கெட். அதுவும் கேன்சல் பண்ண முடியாத டிக்கெட். மேல் மட்ட டிக்கெட் தவிர அனைத்தும் காலி. முழுவதும் பச்சை


angbu ganesh, chennai
2025-08-20 09:56:34

பொறாமை பிடிச்ச