சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்!
ஹிந்தியில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‛சிக்கந்தர்'. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛மதராஸி' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் முருகதாஸ். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு சல்மான்கானே காரணம் என்பது போல் கூறியுள்ளார்.
அதாவது, ‛‛சல்மான்கானுடன் பணிபுரிவது அத்தனை எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் அவர் படப்பிடிப்பின் போது தாமதமாகதான் வருவார். பகலில் திட்டமிட்டபடி படமாக்க முடியாமல் செயற்கை விளக்குகள் மூலம்தான் அவரது காட்சிகளை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவற்றை எல்லாம் சிஜி மூலம் சரி செய்தோம். இதற்கெல்லாம் மேலாக இந்த படத்தின் கடைசி நேரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ்.