ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்!
ADDED : 46 days ago
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தவர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் ‛சாமி, குத்து, திருப்பாச்சி' உள்ளிட்ட பல படங்களில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். அதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவரது மனைவியான ருக்குமணியும் நேற்று மரணமடைந்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்த மாதங்களில் கோட்டா சீனிவாசராவும், அவரது மனைவியும் மரணம் அடைந்திருப்பது திரையுலக வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கோட்டா சீனிவாச ராவ், ருக்குமணி தம்பதியருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் அவர்களது மகன் வெங்கட் ஆஞ்சநேய பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.