பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை
ADDED : 130 days ago
தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த சினிமா தொடர்பான புத்தகம் எழுதியுள்ள எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த விருதை பெற்ற முதல் பெண்ணும், முதல் நடிகையும் பானுமதி ஆவார்.
'நாலு நீனு' (நீயும் நானும்) என்ற தெலுங்கு புத்தகத்தை எழுதியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நூல் அவரது சுயசரிதை ஆகும். 1993ம் ஆண்டு நடந்த 41வது தேசிய விருது விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பானுமதி நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் அறியப்பட்டவர், ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.