வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள்
ADDED : 47 days ago
கடந்த 2022ம் ஆண்டில் ஆண்டரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் 'வதந்தி'. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சில மாதங்களாக வதந்தி 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெங்கியுள்ளது என்கிறார்கள்.
வதந்தி 2ம் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும், இந்த வெப் தொடரில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நட்பே துணை படத்தில் நடித்த அனகா நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த வெப் தொடர் அடுத்த வருடத்தில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.