உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்

தெலுங்கில் பவன் சதிநேனி இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து வரும் படம் 'ஆகாசம்லோ ஒக்க தாரா'. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி நடித்து வருகிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் சொப்னா சினிமாஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்திலிருந்து வெளியான க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார். இந்த தகவலை ஸ்ருதியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அதுப்பற்றி முறையான அறிவிப்பு வரும், நான் வேறு எதுவும் கூற மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !