அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன்
ADDED : 46 days ago
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றனர். இதை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்த படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை இன்று (ஆக., 20) நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.