உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்!


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் 'அமரன்'. ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்தது. 350 கோடி வசூலித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் நவம்பர் 20ம் தேதியான இன்று முதல் நவம்பர் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுக்கு அமரன் படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பனோரமா பிரிவின் கீழ் தொடக்க படமாக இந்த படத்தை திரையிடுகிறார்கள். இது குறித்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !