சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி!
'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கருப்பு'. த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்திலும் நடித்து முடிக்க போகிறார் சூர்யா. ஆனபோதும் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை இப்போதுவரை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், தற்போது கருப்பு படத்தின் கிளைமாக்ஸை மாற்றி உள்ளாராம் ஆர்.ஜே.பாலாஜி. அதாவது, ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா- 2' படம் திரைக்கு வந்த பிறகு அந்த சாயலில் கருப்பு படத்தின் கிளைமாக்ஸில் சில மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளாராம். அதனால் சூர்யாவிடத்தில் மூன்று நாள் கால்ஷீட் வாங்கி தற்போது அந்த காட்சிகளை படமாக்கி வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இதில் சண்டை காட்சி மட்டுமின்றி சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளும் படமாக்கப்படுகிறது. அந்த வகையில் சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாதது கிளைமாக்ஸ் மாற்றமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.