விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி!
ADDED : 113 days ago
நடிகை நயன்தாராவின் 41வது பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த காரின் விலை 10 கோடி என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் அட்லியும், 7.5 கோடி மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், ஜவான் படத்தை அடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது 6வது படத்தின் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் அட்லி. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.