'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..!
ஓடிடி தளத்தில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் ரிலீசாகின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் 'பைசன் காளமாடன்' முதல் பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் ரிலீசாகவுள்ளது.
டீசல்
கடந்த தீபாவளி தினத்தன்று ஹரீஷ் கல்யாணன், அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்'டீசல்'. டீசல் கொள்முதலில் நடக்கும் மோசடிகளை விவரிக்கும் வகையில் இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் நாளை(நவ.21ம் தேதி) வெளியாகவுள்ளது.
பைசன் காளமாடன்
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் 5வது திரைப்படமாக வெளிவந்த படம்'பைசன் காளமாடன்'. கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை தழுவலாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில், துரூவ் விக்ரம், அமீர், பசுபதி, நடிகை அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
நடு சென்டர்
நடிகர்கள் சசிக்குமார், ஜீவா, நடிகை ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வெப் தொடர் 'நடு சென்டர்'. தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் இன்று(நவ.20ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஷேட்ஸ் ஆப் லைப்(Shades of Life)
மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம்'ஷேட்ஸ் ஆப் லைப்(Shades of Life)'. இந்த திரைப்படம் நாளை(நவ.21ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ondu sarala prema kathe
கன்னட மொழியில் வெளியான காதல் ரொமான்டிக் திரைப்படம்'ondu sarala prema kathe'. இந்த திரைப்படம் நாளை(நவ.21ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
முருகேசன் +2
நடிகர்கள் தம்பி ராமையா, எஸ்.கே, காயத்ரி நடிப்பில், இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'முருகேசன்+2'. இந்த திரைப்படம் இன்று(நவ.20ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தி ஜூராசிக் வேர்ல்ட்: கேயாஸ் தியரி சீசன்4
2020ம் ஆண்டு ஒளிபரப்பான ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரெட்டேசியஸின் தொடர்ச்சியாக சீசன் 4 இன்று(நவ.20ம் தேதி) முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.