ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு
ADDED : 166 days ago
கூலி படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் கடந்த சில மாதங்களாகவே நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் கெஸ்ட் ரோலில் பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்த நிலையில், தற்போது இந்த ஜெயிலர் 2 படத்தில் இன்னொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விக்ரம் நடித்து வெளியான வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே .சூர்யாவிற்கு அடுத்தபடியாக இன்னொரு வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.