உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா?

ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து அந்த படத்தை தயாரிக்கிறார்கள் என தகவல். இன்னமும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. ஆனாலும், படம் குறித்து பல அதிரடி தகவல்கள் வருகின்றன.

லேட்டஸ்ட் தகவல்படி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது உறுதி தானாம். 46 ஆண்டுகளுக்குபின் இணைந்து நடிக்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜா என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கூலி, லியோ பட நெகட்டிவ் விமர்சனங்களால் அவர் வேண்டாம் என்று குரல்கள் கேட்கிறதாம். லேட்டஸ்ட்டாக தமிழ் சினிமாவை சேராத இயக்குனரை வைத்து அந்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் மலையாளம் அல்லது தெலுங்கு, ஹிந்தி இயக்குனராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பும் அந்த லிஸ்டில் இருக்கிறாராம். சில கமர்ஷியல் தெலுங்கு டைரக்டர்களும் இருக்கிறார்களாம். அதேசமயம் கமல் தரப்பில் லோகேஷ் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறதாம். சிறிது காலத்தில் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Vasu
2025-08-21 12:11:07

Whatever be the review both Vikram and coolie did well in the box office