சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி'
ADDED : 46 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கூலி' கடந்த வாரம் வெளியானது. படம் ‛ஏ' சான்றிதழ் பெற்றதால் சிறுவர், சிறுமிகள் படத்தை பார்க்க முடியாமல் போனது. இதனால் சிறிதளவு வசூலும் பாதிக்கப்பட்டது. படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வந்தது. என்றாலும் முதல் வாரத்தில் உலக அளவில் 404 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தநிலையில் சிங்கப்பூரில் 'கூலி' திரைப்படத்தை மறு தணிக்கை செய்துள்ளனர். இதில் படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் பெற்றோர் அனுமதியுடன் 18 வயது கீழ் உள்ளவர்களும் படம் பார்க்கலாம் என மறு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.