வாசகர்கள் கருத்துகள் (1)
இதிலென்ன பெரிய விஷயம் உன்னிடம் ரூ 100 கோடி என்னிடம் ரூ 150 கோடி ரெண்டு பெரும் சேர்ந்திடலாம் ஓகேயா இது மட்டும் தான் நடக்கின்றது
இப்பவெல்லாம் தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசுக்கள் குறைந்துவிட்டன. காரணம், காதலிப்பவர்கள் யாருமில்லை. நீண்டகாலத்துக்குபின் அர்ஜூன்தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி குறித்து கிசுகிசுக்கள் கிளம்புகின்றன. முன்பு இப்படிப்பட்ட செய்தி வந்தபோது அதெல்லாம் இல்லை என்று வெட்கத்துடன் மறுத்தார் அர்ஜூன்தாஸ். நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று ஐஸ்வர்ய லட்சுமியும் விளக்கம் அளித்தார்.
இப்போது மீண்டும் இவர்களின் காதல் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம், காதலில் சொதுப்புவுது எப்படி புகழ் பாலாஜி மோகன் இயக்கும் ஒரு வெப்சீரிஸில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னொரு படத்திலும் இருவரும் இணைந்து இருப்பதாக தகவல். நெருப்பு இல்லாமல் புகையுமா? இருவரும் இணைந்து நடிப்பது அந்த உறவின் அடிப்படையில்தான் என்று கோலிவுட்டில் பேசுகிறார்கள்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பேங்கில் கேஷியராகவும், ரேடியா ஆர்.ஜேவாகவும் இருந்தவர் அர்ஜூன்தாஸ். டாக்டராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யலட்சுமி. சமீபத்தில் இவர் நடித்த மாமன் படம் பெரிய ஹிட். கைதி, மாஸ்டர், விக்ரம், குட்பேட்அக்லி அநீதி, ரசவாதம் படங்கள் மூலம் பிரபலமானர் அர்ஜூன்தாஸ்.
இதிலென்ன பெரிய விஷயம் உன்னிடம் ரூ 100 கோடி என்னிடம் ரூ 150 கோடி ரெண்டு பெரும் சேர்ந்திடலாம் ஓகேயா இது மட்டும் தான் நடக்கின்றது