பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி'
ADDED : 45 days ago
மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஏமாற்றம் அளித்த படம் 'குமாரி'. இந்த படத்தை அவர் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனது. நீண்டு கொண்டே செல்லும் கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் எம்ஜிஆருடன், மாதுரி தேவி, ஸ்ரீரஞ்சனி, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், கே.எஸ். அங்கமுத்து, சி.டி. ராஜகாந்தம் மற்றும் புலிமூட்டை' ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பத்மநாபன் இயக்கினார். காட்டுக்குள் தன்னால் காப்பாற்றப்பட்ட ஒரு இளவரசியை மணப்பதற்காக அவளின் அரண்மனைக்கே சென்று அதை சாதிக்கும் ஒரு இளைஞனின் கதை. கே.வி.மகாதேவன் இசையமைத்தார், டி. மார்கோனி ஒளிப்பதிவு செய்தார்.