ரஜினியை சந்தித்த சிம்ரன்
ADDED : 146 days ago
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் சிம்ரன். ரஜினிகாந்த்துடன் 'பேட்ட' படத்தில் இணைந்து நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
ரஜினியை தற்போது சந்தித்துப் பேசியுள்ளார் சிம்ரன். அந்த சந்திப்பு குறித்து, “சில சந்திப்புகள் காலமற்றவை. நமது சூப்பர்ஸ்டாருடன் ஒரு அழகிய தருணத்தை செலவிட்டேன். 'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் 'கூலி' வெற்றி இந்த சந்திப்பை மேலும் சிறப்பாக்கியது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிம்ரன் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் நல்ல வசூலைக் குவித்து, மிகவும் லாபகரமான படமாக அமைந்தது. ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளியான 'கூலி' படமும் 400 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.