உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு

தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு


தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் இதுவரையிலும் உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக அந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. கடந்த வாரம் வெளியான 'கூலி' படம் அந்த சாதனையை முறியடித்து 1000 கோடி வசூலை எட்டும் என படம் வருவதற்கு முன்பாக சிலர் கூறினார்கள். ஆனால், '2.0' படத்தின் வசூலையே 'கூலி' படம் தாண்டுமா என்பது சந்தேகம்தான்.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்றும், நாளையும் ஓரளவிற்கு படத்திற்கு வரவேற்பு இருக்கும். அடுத்த வார வேலை நாட்கள் ஆரம்பித்தால் வரவேற்பு மிகவும் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலவரம். கடைசியாக நான்கு நாள் வசூலாக 404 கோடி என்றார்கள். இந்த வார இறுதி வசூலுடன் சேர்த்தால் 500 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது.

இதனால், தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது கனவாகவே தொடர்கிறது. இதற்கடுத்து அப்படி ஒரு எதிர்பார்ப்பை ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படம்தான் தர வேண்டும். அந்தப் படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும். அதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் 1000 கோடி வசூலுக்காகக் காத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

angbu ganesh, chennai
2025-08-23 14:31:04

cooli வார்-2 கூட ரிலீஸ் ஆகலேன்னா கண்டிப்பா 1000 கோடி அடிச்சிருக்கும், தனியா ரிலீஸ் ஆனா லியோ பேப்பேன்னு ஆயிடுச்சு வெறும் 300 கோடிதான் ஆனா 500 கோடினு ஊர ஏமாத்துரான்.


kuna
2025-08-23 14:19:15

என்னடா இது .தலீவரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை கூவி கூவி தலீவருக்கு சொம்பு அடிச்சிங்க. தலீவரு தான் no.1 உலக நடிகன் ,வசூல் மன்னன், உலக சினிமாவின் விடிவெள்ளி, தலீவரு அப்படி இப்படின்னு பக்கம் பக்கமா எழுதுறீங்க. இப்ப என்னடான்னா தலீவரு படம் 1000 Cr வசூல் இல்லைன்னு சொல்றிங்க. நாளை செய்தில மீண்டும் தலீவரு பற்றி புகழ்ந்து பக்கம் பக்கமாக எழுதுங்க.