ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள்
கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக வரும் வாரம் மோகன்லால் நடித்துள்ள ஹிருதயபூர்வம், பஹத் பாசில் நடித்துள்ள ஓடும் குதிரை சாடும் குதிரை ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக, சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லோகா சாப்டர் 1 ; சந்திரா திரைப்படமும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அதேநாளில் தான் வெளியாகிறது.
சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட படம் என்பதால் ரசிகர்களின் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இரண்டு பிரபல ஹீரோக்களின் படங்களுடன் இந்தப் படம் மோதுகிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் பஹத் பாசில் நடித்துள்ள ஓடும் குதிரை சாடும் குதிரை படத்திலும் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் தான் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த வருடம் நிஜமான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் என்பது கல்யாணி பிரியதர்ஷனுக்கு தான்.