உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்!


நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். முதல் முறையாக சுதா இயக்கத்தில் உருவாகி வரும் ' பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆக நடித்து வருகிறார் ரவி மோகன். இதுவே பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை, தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்.' ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தில் நிவின் பாலியை தாண்டி ஒரு வில்லன் கதாபாத்திரம் உள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்காக அவர் பெரிய சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !