உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம்

நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர் சிலையை தன் கையாலேயே உருவாக்கியுள்ளார் பிரம்மானந்தம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இப்படி விநாயகர் சிலை செய்வதை எப்போது துவங்கினேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இது ஞாபகத்தில் இருக்கும் வரை இந்த கலையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். என் சொந்த கரங்களால் உருவம் கொடுத்து விநாயகர் சிலையை உருவாக்குவது என்பது ரொம்பவே பெர்சனலாக உணர வைக்கிறது. அப்படி இந்த சிலை உருவான நாளிலிருந்து எங்கள் வீட்டில் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட துவங்கி விடுகிறது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

கனோஜ் ஆங்ரே, மும்பை
2025-08-28 18:49:13

இதப் பார்த்தா... கைப் பிள்ளையாரா தெரியலையே... இது அச்சுப் பிள்ளையார் அல்லவா... எங்க ஊர்ல, சிறிய வயதில், குசவனுங்க தெருவுல தன் கையாலேயே பிள்ளையார் சிலை செய்வாங்க... அது அச்சுப் பிள்ளையார் மாதிரி இருக்காது, ஆனால் அழகாக இருக்கும். கையில் செய்யும் கைப் பிள்ளையார் சிறியதா செய்வது மிகவும் கைதேர்ந்த குயவர்களால் மட்டுமே முடியும்... பெரிசாதான் செய்வாங்க... இவர் செஞ்சதாக சொன்னதை பார்த்தா... கையால் செய்தது மாதிரி தெரியலை... அச்சுப் பிள்ளையார் மாதிரி தெரியுது... அதுமட்டுமல்ல, அவர் செய்யுற போட்டோவ நல்லா உற்றுப் பாருங்க.. அச்சுப் பிள்ளையாரை வெச்சி... கையில் செய்யுறதா நடிக்குறாரு...? அய்யா பிரம்மானந்தம்... இப்பத்து சின்ன பசங்களான இளைஞர்களை ஏமாத்தலாம்... அவனுங்க யானைய பூனை...ன்னா நம்புவானுங்க...? நாங்களெல்லாம் பழந்தின்னு கொட்டப் போட்ட ஆளுங்க...?