உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா?

'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா?


நயன்தாரா நடித்த ஹாரர் படம் 'டோரா'. தாஸ் ராமசாமி இயக்கிய இந்த படம் 2017ல் வெளியானது. நயன்தாரா வாங்கும் ஒரு பழைய காரில், ஒரு ஆவி புகுந்து சிலரை பழிவாங்கும். இந்த கதைக்கும் நாய்க்கும் முக்கிய தொடர்பு இருக்கும். இயக்குனர் சற்குணம் இந்த படத்தை தயாரித்தார்.

இந்த படத்தை இயக்கிய தாஸ் ராமசாமி, இப்போது முருகு என தன் பெயரை மாற்றி 'நிஞ்சா' என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் பைனலி பாரத் ஹீரோவாக நடிக்கிறார். பிரார்த்தனா ஹீரோயின், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திலும் நாய் முக்கியமான கேரக்டரில் வருகிறது. ஆனால், இது பேய் படம் இல்லை.

சென்னையில் நடந்த பூஜைக்கு படத்தில் நடிக்கும் நாயும் கலந்து கொண்டு, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. 'பலுான்' படத்தின் இயக்குனரும், 'டிக்கிலோனா, பார்க்கிங்' பட தயாரிப்பாளருமான சினிஷ் தயாரிக்கிறார். நாய் பின்னணியில் ஏகப்பட்ட கதைகள் வந்தாலும், இந்த கரு வித்தியாசமானது என்கிறார்கள் படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !