உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா

பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா

ஷெரிப் இயக்கும் ‛காந்தி கண்ணாடி' படத்தில் ‛கலக்கப்போவது யாரு' பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நமிதா கிருஷ்ணமூர்த்தி அவருக்கு ஜோடி. ஆனாலும் காந்தி என்ற டைட்டில் ரோலில் நடிப்பவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவர் மனைவியாக வருபவர் ‛வீடு' அர்ச்சனா. செக்ரியூட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேலுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு. அவர்களுக்காக என்ன செய்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறதாம்.

எனக்கு 10 கதைகள் வந்தால் சில கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். காந்தி கண்ணாடி பிடித்து இருந்ததால் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்றார் அர்ச்சனா. இருவருமே தேசிய விருது பெற்றவர்கள். வீடு படத்துக்காக தேசிய விருது பெற்றவர் அர்ச்சனா. வழக்கு எண் 18/9 படத்துக்கு தேசிய விருது பெற்றவர் பாலாஜி சக்திவேல். இதற்கு முன்பு ரணம் என்ற படத்தை இயக்கியவர் ஷெரிப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !