சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்'
ADDED : 45 days ago
இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவருமே வெவ்வேறு கதை களங்களில் இயக்குனராக கலக்கியவர்கள். தற்போது இருவருமே நடிப்பில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சமுத்திரகனி தமிழ் தாண்டி தெலுங்கிலும் நடித்து வருகிறார். கவுதம் மேனன் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவருக்கும் பிறமொழிகளில் நடிக்க வாய்ப்பு வருகிறது. மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ராம் சக்ரீ இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவரும் இணைந்து 'கார்மேனி செல்வம்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இவ்வருட தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது என முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இணைந்து ரத்னம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.