உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு

கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் தனது ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். மேலும் ஆரி, பரத், சுனில், பால்டப்பா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் என பெயரிட்டுள்ளனர். இது கோலிசோடா பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பரபரப்பாகவும், சர்ச்சைகளிலும் சிக்கிய ராப் பாடகர் வேடன் இதில் ஒரு பாடலை பாடுகிறார். படத்தின் அறிமுக வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் படம் ரிலீஸாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !