வாசகர்கள் கருத்துகள் (1)
பாதி திருமணம் முடிந்தது. பிறகு அடுத்த உச்சக்கட்டம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகர் சங்கத்தின் செயலாளருமாக இருப்பவர் விஷால். 40 வயதைக் கடந்த பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரும் நடிகை சாய் தன்ஷிகாவும் தாங்கள் இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று(ஆக., 29) விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிலேயே இரு குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். எளிய முறையில் இருவீட்டாரது குடும்பத்தினர் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு, ‛‛இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனது சிறப்பு பிறந்தநாளுக்கு வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. இன்று எனது குடும்பத்தினர் மத்தியில் சாய் தன்ஷிகா உடன் நடந்த எனது நிச்சயதார்த்த செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேர்மறையாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்'' என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்கக் கட்டிடத்தில்தான் தனது திருமணம் நடக்கும் என்று விஷால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இன்னும் ஓரிரு மாதங்களில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் தயாராகிவிடும். அதில்தான் அவர்களது திருமணம் நடக்க உள்ளது.
பாதி திருமணம் முடிந்தது. பிறகு அடுத்த உச்சக்கட்டம்.