உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை

லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்த கூலி படம் 500 கோடி வசூல் செய்திருக்கிறது. இதையடுத்து ரஜினி, கமலை இணைத்து அவர் ஒரு கேங்ஸ்டர் படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் , அதற்கு முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது குறித்த பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே முடிவடைந்து, கடந்த சில மாதங்களாக ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண் மாதேஸ்வரன்.

இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்போது கோலிவுட் வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இதில் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக நடிக்க பல நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மிர்னா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகையான இவர் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர். தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் இன்னொரு நாயகியாக சுதா என்பவரும் நடிப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !