15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி
ADDED : 45 days ago
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதையடுத்து சுதா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதியான நேற்று சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியருக்கு 15 ஆவது திருமண நாளாகும். அதனால் திருமணநாளை தங்களது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.