குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான்
ADDED : 45 days ago
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தை இஸ்லாமியராகவும், தாயார் இந்துவாகவும் இருப்பதால் அவர் இரண்டு மதங்களின் பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார். மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு மினி இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சல்மான்கானின் சகோதரி அர்பிதாகான் ஷர்மாவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் தனது தந்தை மற்றும் தாயாருடன் கலந்து கொண்டுள்ளார் சல்மான்கான். அதோடு விநாயகருக்கு பூஜையும் செய்துள்ளார். இது குறித்த வீடியோவை இணையப்பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.