உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு

பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு

எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜயகாந்த் கூட்டணி வெற்றிக் கூட்டணிகளாக வலம் வந்த காலத்தில் படம் பூஜை போடும் நாள் அன்றே வியாபாரமும் ஆகிவிடும், பழிவாங்கல், சட்டத்தை விமர்சித்தல் மாதிரியான படங்களை இந்த கூட்டணி தந்து கொண்டிருந்த நேரத்தில் உருவான படம்தான் 'நான் நக்சலைட் அல்ல'.

இந்த படத்தில் விஜயகாந்துடன் ராதிகா, ஜெய்சங்கர், அனுராதா, வடிவுக்கரசி, செந்தாமரை, மாஸ்டர் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார்.

ஏழை இளைஞனான விஜயகாந்த்தை பணக்கார பெண்ணான ராதிகா துரத்தி துரத்தி காதலிப்பார். இருவரும் காதலிக்க தொடங்கும்போது வில்லன்கள் கூட்டத்தால் விஜயகாந்த் குடும்பே நசுக்கப்படும், இதனால் வெகுண்டெழும் விஜயகாந்த் வில்லன்களை பழி வாங்குவதுதான் கதை.

படம் தணிக்கைக்கு சென்றபோது அதீத வன்முறை காட்சிகளை நீக்கச் சொன்னதோடு, படத்தின் தலைப்புக்கும் அனுமதி மறுத்தது. இனால் வன்முறை காட்சிகள் குறைக்கப்பட்டு படத்தின் தலைப்பு 'நீதியின் மறுபக்கம்' என்று மாற்றப்பட்டு வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !