சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா?
தக்லைப் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களில் சிம்பு கமிட்டாகி இருப்பதாக அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது. என்றாலும் அந்த படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டதோடு, அந்த படத்தின் ப்ரோமோவை படமாக்கினார் வெற்றிமாறன். இதனால் அந்த படம் உடனடியாக தொடங்கி விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வட சென்னை படத்தை இயக்கிய வெற்றிமாறன் அதற்கு முந்தைய காலகட்ட கதையில் இந்த படத்தை இயக்குவதாகவும், இந்த படத்தில் கேங்ஸ்டராக சிம்பு நடிப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அடுத்தகட்டத்தை நோக்கி அப்படம் நகரவில்லை. இது குறித்து விசாரித்தபோது, இந்த படத்தை தயாரிக்க இருந்த தாணு விலகி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிம்பு நடிக்கும் இந்த படத்தை தனது சொந்த பேனரில் வெற்றிமாறனே தயாரித்து இயக்க திட்டமிட்டு வருகிறாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.