உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ்

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ்

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படம் ஜனநாயகன். அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் போஸ்டரில் , நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலில் ஒரு சாட்டையை கையில் எடுத்தபடி எம்ஜிஆர் பாணியில் போஸ் கொடுத்தார் விஜய். தொடர்ந்து அவரின் பிறந்தநாளில் மேலும் சில போஸ்டர்கள் வெளியாகின. அதில் ஒரு போஸ்டரில் போலீஸ் ரோலில் இருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் எம்ஜிஆரின் அந்த நான் ஆணையிட்டால் பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பதாக அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள். அதோடு ஜனநாயகன் படத்தின் தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் பாடலை வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !