உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி'

இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 14ல் வெளியான படம் 'கூலி'. இப்படம் முதல் நாளில் 151 கோடி ரூபாயை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பிறகு நான்கு நாளில் 404 கோடி வசூலித்ததாக சொன்னவர்கள் அதன்பின் இதுவரையில் எந்த வசூல் அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நேற்றோடு இப்படம் இரண்டு வாரங்களை நிறைவு செய்து மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் ஓரளவிற்கு தியேட்டர்களில் வசூல் இருக்கும். திங்கள் கிழமை முதல் அது குறைவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி படம் 500 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும் இப்படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது. இந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் ஒரு வாரம் வரை ஓடுவதே பெரிய விஷயாமக உள்ளது. 'கூலி' படம் இரண்டு வாரம் தாக்குப் பிடித்து ஓடிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

Columbus
2025-08-30 14:19:34

Now tickets available Buy one Get one free as per Kumudam Reporter.


முருகன்
2025-08-29 16:50:14

தயாரிப்பாளரே அமைதி காக்கும் போது கூலிக்கு மட்டும் ஏன் இந்த கரிசனம்


angbu ganesh, chennai
2025-08-30 14:06:08

அது அப்படித்தானே சுத்தும் வழுக்கவேய வழுக்காது


தொளபதி
2025-08-30 09:09:13

அன்று விமர்சனத்தில் கிழி கிழி என்று கழித்தார்கள். அது உண்மை என்றால் இன்று ஓடுவது, வசூல் பற்றிய செய்திகளும் உண்மையே. அது சரி, அவர்கள் படத்தை பற்றி நல்ல செய்தி போட்டால் உங்களுக்கு ஏன் உறுத்துகிறது?