புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில்
தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ஹிந்தி படங்கள் மற்றும் ஹிந்தி வெப் சீரிஸிகளில் நடித்து வருகிறார் தமன்னா. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் தமன்னா. இரண்டு பேரும் வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சுற்றித் திரிந்தார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பிரேக் அப் செய்து விட்டார்கள். தற்போது இன்னொரு பாலிவுட் நடிகையுடன் விஜய் வர்மா காதலில் விழுந்திருப்பதாக பாலிவுட்டில் ஒரு கிசுகிசு வெளியாகி வருகிறது. தமன்னா அளித்த ஒரு பேட்டியில், உங்களது முன்னாள் காதலர் விஜய் வர்மா தற்போது இன்னொரு நடிகையுடன் சுற்றிக்கொண்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எனக்கும் அவருக்கும் பிரேக்அப் ஆகி பல மாதங்கள் ஆகிவிட்டது . அப்படி இருக்கும்போது அவர் யாரை காதலித்தால் எனக்கென்ன என்று பதில் கொடுத்திருக்கிறார் தமன்னா.