உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி

இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி

நடிகர் விஷால் தனது நிச்சயதார்த்தம் முடிந்த பின் சென்னை தி நகர் உள்ள நடிகர் சங்கம் புது கட்டட பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அளித்த பேட்டி : இன்று காலை எனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் சங்க புது கட்டட பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடியும். அதன் திறப்பு விழா நடந்தபின் அடுத்த முகூர்த்ததில் அடுத்த எங்கள் திருமணம் நடக்கும்.

நானும் தன்சிகாவும் இணைந்து நடித்தது இல்லை. ஆனாலும் நடிகர் சங்கம், அதன் பணிகள் எங்களை சேர்த்து வைத்தது. கடவுள் எனக்கு அனுப்பிய தேவதை அவர். இன்று எங்கள் பெயர் பொறித்த மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. இத்தனை ஆண்டுகள் வாழ்த்த பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இனி நான் நிறைய மாறுவேன். குறிப்பாக சினிமாவில் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.

மேலுன் அவர் கூறுகையில், அடுத்த பேச்சிலர் ஆக இருக்கும் சிம்பு, அதர்வா, ஜெய், திரிஷாவுக்கும் நல்ல நேரம் அமைய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !