உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா

பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா

கார்த்திகை தீபம், சின்னஞ்சிறு கிளியே, வரிசையில் தற்போது ஜீ தமிழில் 'பாரிஜாதம்' என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமடைந்த ஆல்யா மானசா, முக்கிய கதாபாத்திரத்தில் இசை என்ற ரோலில் நடிக்க உள்ளார். அவருடன் ராஷிக் உர்ஸ், கோபால், சுவாதி ஆகியோரும் நடிக்கின்றனர். ஜீ தமிழில் 'இனியா' தொடருக்கு பிறகு ஆல்யா மானசா நடிக்கும் சீரியல் இதுவாகும். இதில் இசை என்ற கேரக்டரில் ஆலியா நடிக்கிறார்.

ஒரு விபத்தில் காது கேட்கும் தன்மையை இழக்கும் இசை, ஒரே ஒரு பொய்யால் இசையே உலகம் என இருக்கும் பிரபல பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். ஜாதகத்தை பெரிதாக நம்பும் இசையின் மாமியார் 10 பொருத்தமும் பக்காவாக இருப்பதாக சொல்லி இசையை கொண்டாடுகிறாள். ஆனால் இசையின் ஜாதகம் அவளது சித்தியால் மாற்றி எழுதப்பட்டது என்ற உண்மை தெரிய வந்தால் என்ன நடக்கும்?, இசைக்கு காது கேட்காது என்ற உண்மையும் தெரிய வந்தால் அவளது வாழ்க்கை என்னவாகும்? என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !