உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

சமீபத்தில் மலையாளத்தில் லோகா சாப்டர் 1 சந்திரா என்கிற படம் வெளியானது. கிட்டத்தட்ட சூப்பர் உமன் கதை அம்சத்துடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது 90 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வில்லனாக நடன இயக்குனர் சாண்டி மலையாளத்தில் முதல்முறையாக அறிமுகமாகி உள்ளார்.

படத்தில் சாண்டி தன் தாயிடம் பேசும் போது பெங்களூருவில் இருந்து வரும் பெண்களை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிற விதமாக அவர்களை பற்றி ஒரு வசனம் பேசுவார். இந்த நிலையில் படம் பார்த்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பலரும் இப்படி தங்கள் ஊர் பெண்களை தவறாக சித்தரித்து காட்சி இடம் பெற்றதற்காக தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பளாரான துல்கர் சல்மான்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் கர்நாடகாவில் உள்ள மக்களின் சென்டிமென்ட்டை புண்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படி ஒரு வசனம் இடம் பெறவில்லை. அந்த வார்த்தைகளை நீக்க நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

நிக்கோல்தாம்சன், chikkanayakanahalli tumkur dt and Bangalore
2025-09-03 12:23:11

உண்மையில் அந்த வார்த்தைகள் மலையாள கம்யூனிச பெண்களுக்கு தான் பொருந்தும்