உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள்

தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள்

முன்பெல்லாம் மலையாள சினிமாக்களுக்கு தமிழில் மார்க்கெட் அதிகம் கிடையாது. மலையாள படங்கள் தமிழில் டப் ஆகாது. சென்னை, கோவையில் சில தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்களின் வெற்றி காரணமாக, கொரோனா காலத்துக்குபின் மலையாள சினிமாக்கள் ஓடிடி மூலம் பிரபலம் ஆனதன் காரணமாக நிலவரம் மாறிவிட்டது.

பல மலையாள படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியிடப்படுகின்றன. சில சமயம் நேரடி மலையாள படங்களும் தமிழகத்தில் நிறைய தியேட்டர்களில் வருகின்றன. தமிழகத்தில் தனி வினியோகஸ்தர், ஏகப்பட்ட தியேட்டர் என மலையாள சினிமாவுக்கு தனி மார்க்கெட் உருவாகி விட்டது. அதனால், பல தமிழ் கலைஞர்களை பிஸினசை கருத்தில் கொண்டு மலையாள படங்களில் நடிக்க வைக்கிறார்கள். தமிழில் டப்பான பல மலையாள படங்களுக்கு டப்பிங் டைரக்டர் ஆக இருந்தவர் ஆர்.பி.பாலா. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் இயக்குநர் மற்றும் தமிழ் வசன எழுத்தாளர் ஆக 100க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.

சமீபகாலங்களில் வெளியான பரோஸ், ஜன கண மன, நேர், ஆடுஜீவிதம், மஞ்சும்மல் பாய்ஸ், வாழ, லூசிபர் 2 : எம்புரான், தொடரும், நரிவேட்டா மற்றும் சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்சனின் லோகா படங்களுக்கும் ஆர்.பி.பாலாதான் டப்பிங் டைரக்டராக இருந்து தமிழ்ப்படுத்தி இருக்கிறார். இப்போது சென்னையிலும் கூட பல மலையாள படங்களின் டப்பிங் நடக்கிறது. முன்னணி மலையாள நடிகர்கள் இங்கே வந்து தமிழ் பேசிவிட்டு போகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் புலிமுருகன், ஆர்டிஎக்ஸ், திரிஷ்யம், 2018, மாளிகை புரம், ஆவேசம், உள்ளொழுக்கு, குருவாயூர் அம்பலநடையில், நுணக்குழி, கிஷ்கிந்தா காண்டம் போன்ற பல மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !