உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம்

பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம்


சினிமா தொடங்கிய காலத்தில் வசனங்கள் பாடல்களாகவே இருந்தது. பின்னர் நீட்டி முழக்கி கவிதையாக பேசினார்கள். பின்னர் பக்கம் பக்கமாக பேசினார்கள். பின்னர் சாதாரண தமிழில் பேசினாலும் வளவளவென பேசினார்கள். இந்த பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு 'நறுக்' வசனங்களால் உருவான படம் 'பகல்நிலவு'.

மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ் படம். ஊரையே ஏமாற்றி வெளியில் நல்லவன் வேஷம் போடும் வில்லன் சத்யராஜை எதிர்த்து ஹீரோ முரளி மக்களை திரட்டி போராடுகிற சாதாரண கதைதான்.

ஆனால் இளையராஜாவின் இசை, ராமச்சந்திர பாபுவின் ஒளிப்பதிவு, பி.லெனின் எடிட்டிங் இவற்றோடு சேர்ந்து நறுக் வசனமும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதனால் தன்னுடைய எல்லா படத்திலும் நறுக் வசங்களையே பயன்படுத்தினார் மணிரத்னம். 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு இந்த பாணியை மாற்றிக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !