உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை


இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றார். சினிமாவிற்கு இசை அமைப்பதோடு, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பல ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களையும் நிர்வகித்து வருகிறார். சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார், இளைய மகள் சமையல் கலை நிபுணராக உள்ளார். மகன் தந்தையை போல இசை உலகில் இருக்கிறார். மனைவியை பிரிந்தார்.
இந்த நிலையில் அதிக வேலை பளுவின் காரணமாக தன்னால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் வாழ்க்கை இழந்து விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் பல திட்டங்களை தீட்டி செயல்படுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக அவை முடியாமல் போகலாம். நானும் அப்படித்தான். என்னை பொறுத்தவரை, எதைப்பற்றியும் யோசிக்காமல் காலத்தின் போக்கிலேயே, நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

முன்பெல்லாம் வெறி பிடித்தவன் போல இரவு, பகல் பாராமல் வேலை செய்தேன். அப்படி அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். அந்தவகையில் இப்போது என் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !