உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா'

வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா'


முகேஷ்குமார் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜுன் 27ம் தேதி தெலுங்கில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'கண்ணப்பா'. பொதுவாக ஒரு படம் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படம் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் இன்று முதல் வெளியாகிறது.

இப்படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சிவனின் மீது தீவிர பக்தி கொண்ட கண்ணப்பாவின் சரித்திரக் கதையாக இந்தப் படம் வெளிவந்தது. நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்கவில்லை. அது படக்குழுவினருக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்தது.

ஓடிடியில் வெளியான பிறகு இப்படம் மிக அதிகமான வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !