மேலும் செய்திகள்
விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின்
1 minutes ago
எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா
1 minutes ago
ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ?
1 minutes ago
சென்னையில் நடந்த பிளாக்மெயில் பட நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர், வினியோகஸ்தரான தனஞ்செயன் ''சினிமா சுற்றி பல நெகட்டிவான விஷயங்கள் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வரும்போது அதை கெடுக்க வேண்டும் என பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிதான் ஒரு படம் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு பெரிய பட்ஜெட் படம் வந்தால் அது குறித்து திட்டமிட்டு பொய் செய்தி, நெகட்டிவ் தகவல் பரப்புகிறார்கள். அதை பார்த்துவிட்டு பலர் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வருவது இல்லை. என் உறவினர்கள் கூட இதை சொல்கிறார்கள்.
சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள். நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்துதான். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை நெருங்குவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. சம்பளமே வாங்காமல் கூட நடிப்பார். ஏனெனில், நடிப்பது அவருக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜிவி பிரகாஷ்'' என்றார்.
நெகட்டிவ் ரிவியூ அதிகம் வரும் நேரத்தில் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டு கூட்டம் நடத்தி முக்கியமான அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட கூட்டத்தை கூட்டும் ஐடியா கூட யாருக்கும் வரவில்லை என்கிறார்கள் நெகட்டிவ் ரிவியூவால் பாதிக்கப்பட்டவர்கள்.
1 minutes ago
1 minutes ago
1 minutes ago