மேலும் செய்திகள்
சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ்
8 minutes ago
எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா
8 minutes ago
ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ?
8 minutes ago
ஒருகாலத்தில் மிஷ்கினும், விஷாலும் நண்பர்களாக இருந்தார்கள். துப்பறிவாளன் படத்தில் விஷாலை ஸ்டைலாக நடிக்க வைத்து அழகு பார்த்தார் மிஷ்கின். ஆனால், துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் மிஷ்கின், விஷால் இடையே பிரச்னை ஏற்பட்டது. மிஷ்கின் அதிக செலவு வைத்து விட்டார். சரியாக படப்பிடிப்பு நடத்தவில்லை என்று விஷால் தரப்பு குற்றம் சாட்டியது. விஷால் செய்த தவறுகளால் இவ்வளவு பிரச்னை என்று மிஷ்கின் தரப்பு பொங்கியது.
ஒரு மேடையில் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார் மிஷ்கின். பின்னர், துப்பறிவாளன் படத்தை தானே இயக்கப் போகிறேன் என்று விஷால் அறிவித்தார். சில பைனான்ஸ் பிரச்னை காரணமாக அந்த படம் அப்படியே நிற்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் 'விஷால், சாய் தன்ஷிகா திருமணம் குறித்து மிஷ்கின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஷால் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றாலும், அவருக்காக ஒதுங்கி நின்று பிரார்த்தனை செய்வேன். சாய் தன்ஷிகா தனக்கு தெரிந்தவர் என்று கூறியுள்ளார்.
இதனால் மிஷ்கினை தனது திருமணத்துக்கு விஷால் அழைப்பாரா? இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்து துப்பறிவாளன் 2 படத்தை முடிக்க, சாய்தன்சிகா முயற்சிகள் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
8 minutes ago
8 minutes ago
8 minutes ago