உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா

எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா

மலையாளத்தில் கடந்த வியாழனன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்த லோகா சாப்டர் 1 : சந்திரா என்கிற படம் வெளியானது. சூப்பர் உமன் கதை கதையம்சத்துடன் வெளியான இந்த படம் குழந்தைகள் பெரியவர் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. இத்தனைக்கும் இந்த படத்துடன் மோகன்லாலின் ஹிருதயபூர்வம், பஹத் பாசிலின் ஓடும் குதிரை சாடும் குதிரை ஆகிய படங்கள் வெளியானாலும் கூட கதாநாயகியை மையப்படுத்தி உருவான இந்த படம் அதிக திரையரங்குகளில் அதிக காட்சிகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியான எட்டு நாட்களில் 12௦ கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது.. இதற்கு முன்பு வரை மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ் என ஹீரோக்கள் மட்டுமே செய்து வந்த இந்த சாதனையை முதன்முறையாக கதாநாயகியை மையப்படுத்தி வெளியான ஒரு படம் பெற்றிருப்பது மலையாள திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் இதுவே முதல் முறை... இதே வரவேற்புடன் இந்த படம் பயணித்தால் விரைவில் இருநூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !