மேலும் செய்திகள்
எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா
8 minutes ago
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
8 minutes ago
செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
8 minutes ago
நடிகர் மாதவன் முன்னெப்போதும் விட தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிசியான நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக இந்த 2025-ல் தமிழில் அவர் நடித்த டெஸ்ட் ஹிந்தியில் மூன்று படங்கள் உட்பட அவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி விட்டன. அடுத்து தமிழில் அதிர்ஷ்டசாலி மற்றும் ஹிந்தியில் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மாதவனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான எம்.எஸ் தோனியும் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் மாதவனும் தோனியும் கையில் துப்பாக்கியுடன் ஸ்பெஷல் போலீஸ் படைக்கான உடைகள் அணிந்து கையில் துப்பாக்கியுடன் ஒரு காரில் நின்றபடி இருக்க, காருக்குள்ளும் வெளியேயும் இன்னும் சில வீரர்கள் இருக்கின்றனர். அதேசமயம் இது நிச்சயமாக திரைப்படத்திற்காக அல்ல என்பதும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் ஏதோ ஒரு புதிய விளம்பர படத்திற்காக தான் என்றும் சொல்லப்படுகிறது.
8 minutes ago
8 minutes ago
8 minutes ago