மலையாள ஹீரோக்களில் மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், டொவினோ தாமஸ் போன்றவர்களுக்கு தமிழில் ஓரளவு வரவேற்பு கிடைக்கிறது. துல்கர் சல்மான், பஹத் பாசில், பசில் ஜோசப் ஆகியோருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் திலீப், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, நிவின்பாலி ஆகியோர் அந்த இடத்தை பிடிக்கவில்லை. நிவின்பாலி தமிழில் நடித்த நேரம் இங்கே பெரிய ஹிட். அவர் தமிழில் தனக்கென மார்க்கெட்டை பிடிக்க நினைக்கிறார். அவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாக உள்ள அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள் படத்தை தமிழில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
'கருடன்' என்ற மலையாள படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி மற்றும் சஞ்சய் . டிராபிக் படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார். நிவின் பாலிக்கு இணையாக லிஜோ மோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதற்குமுன்பு நிவின்பாலி நடித்த ரிச்சி, ஹே டியூட், காயங்குளம் கொச்சுண்ணி, மைக்கேல், மகாவீர்யார் ஆகிய படங்களில் தமிழில் வெளியானாலும் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. தமிழில் அடுத்து ராம் இயக்கத்தில் நிவின்பாலி நேரடியாக நடித்த ஏழு கடல் ஏழு மலை படமும் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.