உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர்

அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர்

தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா தற்போது 'தி கேம்' என்கிற புதிய வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இவருடன் முக்கிய வேடங்களில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி, சயமா ஹரிணி, பாலாஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ் , ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆன்லைன் பின்னணியில் நடக்கும் கேமை வைத்து மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 2ம் தேதியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !