உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'

குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் 'கூலி'. அப்படம் வெளியான பின் வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் கடந்த மூன்று வாரங்களாக அப்படம்தான் பல தியேட்டர்களிலும் ஓடி வந்தது. நேற்று சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படம் வெளியானதால், 'கூலி' ஓடிய பல தியேட்டர்களிலிருந்து அப்படம் தூக்கப்பட்டது. அதனால், மிகக் குறைந்த தியேட்டர்களில் குறைந்த காட்சிகளுடன் 'கூலி' நான்காவது வாரத்தைத் தொடர்கிறது.

ஓடிடியில் இப்படம் செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக நாளை வரை இந்தப் படம் தாக்குப் பிடிக்கும், அதற்குப் பிறகு சுத்தமாக வரவேற்பு இருக்காது என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அந்த வசூலை 'ஜெயிலர் 2' தான் வந்து முறியடிக்கும் போலிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !