உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!

‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!


நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் 'இட்லி கடை'. டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட துவங்கியுள்ளனர். முதலாக அருண் விஜய் இந்த படத்தில் அஸ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இட்லி கடை உலகமெங்கும் அக்டோபர் 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !