உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!

கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!


நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் ‛அசுரன், விடுதலை 2, வாத்தி' ஆகிய படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சியை எளிமையான முறையில் நடத்தியுள்ளனர்.

இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகும் ஒரு ஜாலியான படம் என்கிறார்கள். கென் இயக்கி, நடிக்கவுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக தெலுங்கில் ‛கோர்ட் vs ஸ்டேட் நோபடி' படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ தேவி அப்பலா, மலையாள நடிகை அனிஸ்மா மற்றும் ஹிந்தி சீரியல் நடிகை பிரியன்ஷி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் கென் கருணாஸூக்கு அப்பா கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சுராஜ் வென்ஜரமூடு, அம்மா கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !